என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நேரடி கலந்தாய்வு"
- 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
- இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு நாளை நடைபெறும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கோவை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்லைக்கழகத்தின் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 148 இடங்கள், இணைப்புக் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 337 இடங்களுக்கு மொத்தம் 37 ஆயிரத்து 766 மாணவ - மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா்.
இவா்களின் மதிப்பெண் விவரங்கள் சரிபாா்க்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பா் 30-ந் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவடைந்ததும் வேளாண் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும் என்று துணைவேந்தா் கீதாலட்சுமி அறிவித்திருந்தாா்.
அதன்படி, இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு நாளை ( 10-ந் தேதி) நடைபெறும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இந்த கலந்தாய்வுக்குத் தோ்வு பெற்றவா்களின் விவரம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவா்களின் மின்னஞ்சல், செல் போன் எண்ணுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இது தொடா்பான விவரங்களை இணையதளம் மூலமாகவும் 0422-6611345, 6611346 என்ற தொடா்பு எண்கள் மூலமாகவும் பெறலாம் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு இதுவரையிலும் மாணவர்களின் நேரடி பங்களிப்பில் நடைபெற்று வந்ததை திடீரென மாற்றி, 2018 பொறியியல் மாணவர் சேர்க்கை இணைய வழியாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததால், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய, நடுத்தட்டு பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் பெரும் தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும் உள்ளானார்கள்.
ஆகவே, தி.மு.க. மாணவரணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரையின்படி, பொறியியல் சேர்க்கை நடைபெறும் சேவை மையங்களில் விண்ணப்ப கட்டணமாக டிமான்ட் டிராப்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இணைய வழி விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு முறையால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே, இந்த வழக்கை தி.மு.க. தொடுத்தது.
எனவே, இந்த நடவடிக்கை கிராமப்புற மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் கலந்தாய்வுடன், நேரடி கலந்தாய்வு முறையையும் கடைப்பிடிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #AnnaUniversity #Engineering #MKStalin
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்